தூத்துக்குடியில் மீண்டும் கீதா ஜீவனுக்கு வாய்ப்பு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட (திமுக) வாய்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் முக்கிய முகமாக விளங்கி வரும் கீதா ஜீவன், கடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்தவர். இதனால், இந்த முறை அவரையே வேட்பாளராக அறிவித்துள்ள கட்சி, அந்த பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.
கட்சியின் இந்த முடிவு, திமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர் அணியினர், அவரின் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை வரவேற்றுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய தலைவராக கீதா ஜீவன் அறியப்படுகிறார். கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டது, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் இந்த தொகுதியில் கடுமையான போட்டியை உருவாக்கத் திட்டமிட்டு வருகின்றன. இதனால், வரும் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அரசியல் ரீதியாக அதிக கவனம் பெறும் எனக் கருதப்படுகிறது.
கீதா ஜீவன் தனது அமைச்சர்பதவிக் காலத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைகளே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க காரணமாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது ;
வரும் தேர்தலில் 50 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் மீண்டும் திமுக ஆட்சி வரும் இப்போது உள்ள திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தி கழக ஆட்சி தொடரும் என்று கூறினார்.

