November 4, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் யுகாதி விழா: பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி: நாயுடு மகாஜன சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில் யுகாதி விழா அபிராமி மஹாலில் நாள் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது.

காலை கோலப்போட்டி நடைபெற்றது. தொடர்ந்து “திருமண தகவல் பரிமாற்றம்” நிகழ்ச்சியில் மணமகன், மணமகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. மாலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதுடன், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மியூசிக்கல் சேர் போட்டியும் நடத்தப்பட்டது.

மாலை நடைபெற்ற விழாவிற்கு சங்க நிர்வாகிகள் தலைமையிலும், பலர் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், வரும் 29ஆம் தேதி “நம்ம ஊர் கல்யாண மாலை” திருமண பதிவு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.