November 5, 2026
#தூத்துக்குடி

மொழிப்போர் தியாகிகள் தினம்: திமுக அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி

தூத்துக்குடி:மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் புகைப்படத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசுகையில், தமிழ்மொழி, தமிழ் பண்பாடு மற்றும் சமூக நீதியை பாதுகாக்க திமுக தொடர்ந்து போராடி வருவதாகவும், மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.