November 4, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

“தீபம் எங்கள் உரிமை” – பாஜக மாநில தலைவர் நயினார் கைது கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் மதுரை கிளை  வழங்கிய அனுமதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் சென்றிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் அவர்கள், காவல்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக முழுவதும் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தெற்கு மண்டலத்தின் சார்பில் முத்தையாபுரம் பல்க் அருகில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல் தலைவர் மாதவன், கிழக்கு மண்டல் பிரபாரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர் மாசாணம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், பிரிவு தலைவர் சின்ன தங்கம், சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட தெற்கு மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டதை கடும் கண்டனம் தெரிவித்தனர்.