by,CN.அண்ணாதுரை
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் மாவட்ட செயலாளர் கீதாஜீவன் தலைமையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளரும் தொகுதி பார்வையாளருமான இன்பா ரகு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்;
தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி நடைபெறும் பாக முகவர்கள் (BLA 2) கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறோம். கழகத் தலைவர் தளபதியார் கூறியதுபோல் கழகத்தின் முக்கிய ஆணிவேராக இருப்பவர்கள் பாக முகவர்களாகிய நீங்கள்தான். உங்கள் பகுதியில் யார் வசிக்கிறார்கள், யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள், மற்றும் இறப்பு குறித்த புள்ளி விபரங்கள் உங்களுக்கு தான் தெரியும், விரைவில் வாக்காளர் சரிபார்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் புதிய வாக்காளர் சேர்ப்பது, முகவரி மாற்றம், இறப்பு நீக்குதல் உள்ளிட்ட பணிகளை முறையாக பின்பற்றி அந்த பட்டியலை சரிபார்த்து தேர்தல் முன்களப்பணியை சிறப்பாக செய்ய வேண்டும். தங்களது பாகத்தில் பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு மற்றும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து திட்டமிட்டு ஒற்றுமையுடன் வீடுவீடாக சென்று பணியாற்ற வேண்டும். இதில் ஏதும் குறை இருந்தால் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இலக்கான 200 தொகுதிகளையும் தாண்டி அதிகமான இடங்களை கைப்பற்ற அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர அவைத் தலைவர் ஜேசுதாஸன், மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மீனவரணி அமைப்பாளர் டேணி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாநகர அமைப்பாளர் ஆரோக்கிய ராபின் அசோகன், அறங்காவலர்குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், ராதாகிருஷ்ணன், ஜோசப் அமல்ராஜ், ஐடி விங் துணை அமைப்பாளர்கள் நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சின்னதுரை, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஐ.ரவி, டி.டி.சி.ஆர்.பிரவீன், செல்வின் சிவகுமார், சங்கர நாராயணன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

