தூத்துக்குடி,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 2 மற்றும் 14வது வார்டு மக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் அய்யாசாமி காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 31.07.25 அன்று நடைபெற்றது.
| ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். |
தொடர்ந்து “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்டத்தில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட தீர்வாணைகளை சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் முருகேஸ்வரி, மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் முனீஸ்இளநிலை பொறியாளர் ராஜேஷ் கண்ணன்சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் நசரேயன், முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்குமார், மீனாட்சி பிரேமலதா, திருவரங்க செல்வி, ராஜலக்ஷ்மி, இந்திரா நகர் பகுதி திமுக செயலாளர் சிவகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் தர்மராஜ், பூவேஷ், மகளிரணி அமைப்பாளர் பௌசியா, வட்ட செயலாளர் கார்த்திக், தொமுச முத்துராஜ் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

