இந்திய நாட்டின் விடுதலைப்போரில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர்
‘தமிழ்நாட்டின் நேதாஜி’ என்று போற்றப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-ஆவது பிறந்த நாள் மற்றும் 62-ஆவது குருபூஜை நாளை முன்னிட்டு,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டயபுரத்தில்
தேவர் திருமகனார் திருவுருவச்சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், பேரூர் கழகப் பொருளாளர் தேவேந்திரன், வார்டு உறுப்பினர் மணிகண்டன், வார்டு செயலாளர் மஞ்சமாதாதேவி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மாணவர் அணி ஆகாஷ் பாண்டியன், எட்டயபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டினமருதூர்
தொடர்ந்து ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், பட்டினமருதூரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மார்த்தாண்டம் பட்டி, புளியங்குளம் மற்றும் பூசனூர் ஆகிய பகுதிகளில் தேவர் திருமகனார் திருவுருவ படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.உடன் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கல்மேடு ராஜ், வெள்ளைச்சாமி, கிளைச் செயலாளர்கள் இப்ராஹீம், ஆத்தியப்பன், பெருமாள்சாமி, பரமசிவ பாண்டியன், முத்துக் கரும்புலி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட் ராஜ், ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கச்சாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மாணவர் அணி ஆகாஷ் பாண்டியன், புதூர் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் அக்க்ஷய், பசும்பொன் பழனிச்சாமி, சிங்கிலிபட்டி பேச்சியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைதள அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

