December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் அண்ணா 116வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தனர்!

தூத்துக்குடி திமுக பவளவிழா ஆண்டை யொட்டி அனைவருடைய இல்லத்திலும் கருப்பு சிவப்பு கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களது வீடுகளில் கருப்பு சிவப்பு கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டிருந்தனர். இந்நிலையில் அண்ணா 116வது பிறந்தநாளையொட்டி புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், கவிதாதேவி, குபேர் இளம்பரிதி, துணை அமைப்பாளர்கள் நாகராஜன், அருணாதேவி, ராமர், பிரபு, அந்தோணிகண்ணன், ஜேசையா, நிக்கோலாஸ்மணி, செல்வி, பெனில்டஸ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், பரமசிவம், சாகுல்ஹமீது, ஆனந்தசேகா், துணை அமைப்பாளர்கள் ரவி, சத்யா, மகேஸ்வரன்சிங், பெல்லா, முருகராஜ், நாராயணவடிவு, ராமசந்திரன், குமரன், மாநகர இலக்கிய அணி துணைத்தலைவர் நலம்ராஜேந்திரன், தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில்குமாா், மாநகர வக்கீல் அணி தலைவர் நாகராஜன்பாபு, சிறுபான்மை அணிதுணைத்தலைவர் செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், மீனாட்சி சுந்தரம், சுரேஷ், தொழிற்சங்க நிா்வாகிகள் மரியதாஸ், கேடிசி காளியப்பன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, கருப்பசாமி, சுரேஷ், கங்காராஜேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், பொன்னுசாமி, நடேசன் டேனியல், செல்வராஜ், பாலு, செந்தில்குமாா், மூக்கையா, வட்டச்துணைச்செயலாளா் சுந்தா்ராஜன், வட்டப்பிரதிநிதி தங்கம், பாஸ்கர், பால்துரை, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜெயசீலி, வைதேகி, கந்தசாமி, பவாணி மார்ஷல், ரெக்ஸின், இசக்கிராஜா, பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ்மார்லின், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மற்றும் அற்புதராஜ், கருணா, மணி, பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சாா்பில் முனியசாமி, பால்ராஜேந்திரம், பொன்ராஜ், செல்வராஜ், முருகன், மோகன்தாஸ், ஆழ்வார், போஸ், கோபால்சாமி, கலைச்செல்வன், உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.