CN. அண்ணாதுரை
தூத்துக்குடியில் கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாமினை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடியிருந்து வரும் குடியிருப்புதாரர்கள் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பட்டா வைத்திருப்பவர்கள், இதுவரை கணினி பட்டா பெறாத குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
கணினி பட்டா பெறுவதற்கான மனுக்களை பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்;
மாநகராட்சி பகுதியில் கணிணி பட்டா பெறாத குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்காக மனுக்கள் வழங்கியுள்ளனா். அதில் கிரையப் பத்திர நகல் அல்லது அரசு வழங்கிய பட்டா மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் கணினி பட்டா பெறுவதற்கான மனுக்களை பொதுமக்கள் அளித்துள்ளனர். இந்த முகாமில் மூலம் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கியுள்ளனர். அதில் தூத்துக்குடி 1, 2, மீளவிட்டான் 1. 2, சங்கரபோி, முள்ளக்காடு, உள்ளிட்ட பகுதிக்குட்பட்டவர்கள் இதில் பங்குபெற்றுள்ளனா். இதனையும் கடந்து மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த பலா் மனு அளித்துள்ளனர். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, மக்கள் பணி செய்வதற்கு எப்போதுமே முன்நின்று திமுகவினர் பணியாற்றுவாா்கள். திமுக ஆட்சிதான் மக்களுக்கான பொற்கால ஆட்சி. முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்களையும் அதிகாாிகள் குறிப்பெடுத்துக் கொண்டு முறைப்படுத்தி எல்லோருக்கும் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஐடி விங் அபிராமிநாதன், மீனவரணி அந்தோணி ஸ்டாலின், மகளிரணி கவிதாதேவி, சீனிவாசன், மருத்துவர் அணி தலைவர் அருண் குமாா், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஐடி விங் பிரபு, அருணாதேவி, நாகராஜன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மேகநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ஐ.ரவி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜன் பாபு, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, பகுதி மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமாா், சதீஷ்குமாா், பாலகுருசாமி, கங்காராஜேஷ், ரவீந்திரன், ராஜாமணி, கருப்பசாமி, சுரேஷ், கவுன்சிலா்கள் ஜெயசீலி, விஜயகுமாா், தெய்வேந்திரன், தனலட்சுமி, ரெக்ஸின், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், சந்திரபோஸ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர்குமரன், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், மார்க்கின் ராபட், கிராம நிர்வாக அலுவலா்கள் கணேசமூர்த்தி, சேர்மலதா, பாலமுருகன், பிரேமலதா, மீனாட்சி, சின்னத்தாய், நட்டார்செல்வம், நில அளவையாளா்கள் சோனதிபதி, மொ்லின், சந்தனமாாி, ஆய்வாளர் சுடலை முத்து, மற்றும் அற்புதராஜ், மணி, அல்பட், ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.