December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம், அமைச்சர் கீதாஜீவன் , மர்கண்டேயன் எம்.எல்.ஏ, தொகுதி பார்வையாளர் பெருமாள் பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற திமுக பாக முகவர் கூட்டம் நேற்று நடந்தது. பாக முகவர் கூட்டத்திற்கு, விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரும், திமுக நெசவாளர் அணி மாநில துணை செயலாளருமான பெருமாள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,.
கடந்த தேர்தலில் 40க்கு நாற்பது வெற்றி பெற்றோம்.அதே போல் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234க்கு 200 இலக்கு  வைத்துள்ளோம். அதற்கான திட்டம் வகுத்து பல்வேறு பணிகளை தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தேர்தலில் பெறுகிற வெற்றியை பொறுத்து தான் ஒரு கட்சியின் வலிமை தெரியும். கடந்த தேர்தலை விட 2026 தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற வேண்டும். எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் டெப்பாசிட் இழக்க வேண்டும். வாக்காளர்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும். பூத் ஏஜெண்ட்,பாக முகவர், செயலாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும். விளாத்திகுளம் தொகுதியில் வரும் 12-ஆம் தேதிக்குள் பாக முகவர்களை பட்டியலிட்டு  பணிகளை முழுமைப்படுத்தி ஒப்படைக்க வேண்டும். என்றும்
பாக முகவர்கள் பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் வசம் வழங்கப்பட உள்ளது என்றும் எல்லா பூத்களிலும் திமுக பிரதிநிதிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். வாக்காளர் சேர்த்தல் நீக்கல் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் திமுக ஆதரவாளர்கள் வாக்குகளை கவனமாக சேர்க்க வேண்டும். 16 மற்றும் 17 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் பாக முகவர்கள் கையில் இருக்க வேண்டும். நம் பணிகளை  மைக்ரோ லெவலில் தலைமை கண்காணிக்கிறது.  எனவே பாக முகவர்கள், கிளை கழக கமிட்டிகளை அரவணைத்து செல்ல வேண்டும்.
துணை முதல்வர், முதல்வர் தூத்துக்குடி வருகை தர உள்ளார்கள். அதன்பிறகு ஐடி விங், மகளிர் அணி உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, புதூர் நகர செயலாளர் மருது பண்டியன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.