தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குலையன்கரிசல் கிராம இளைஞர் காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பு மேடையில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா 28.06.25 மாலை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வெள்ளக்கண் தலைமை தாங்கினார். தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மனும், தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளருமான வி.பி.ஆர்.சுரேஷ், திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் தலைவர் ராமஜெயம் வரவேற்புரை ஆற்றினார்.
பெருந்தலைவர் காமராஜர் சிலையை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். இவ்விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டபிடாரம் – எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி, வட்டார காங்கிரஸ் தலைவர் அபிஷேக், துணைத் தலைவர் பால திணேஷ், கிராம கமிட்டி செயலாளர்கள் ஜெயதுரை, வசந்தகுமார், பொருளாளர் ஜெயம் நாடார், குலையன்கரிசல் விவசாயிகள் சங்க தலைவர் ஹேம்நாத் ஜெகன், முன்னாள் ஊராட்சி தலைவர் குணதுரை மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் குலையன்கரிசல் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்
.

