December 1, 2025
#தூத்துக்குடி

மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் சிலைக்கு மேயர் ஜெகன் மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடியில் உழைப்பாளர் தினத்தன்று தொழிலாளா் சிலைக்கு மேயர் ஜெகன் பொியசாமி மலர் தூவி மாியாதை செய்தார் 

தூத்துக்குடியில் உலக தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் உள்ள ஆயிரம் பிறை பூங்காவிலுள்ள தொழிலாளர் சிலைக்கு மேயா் ஜெகன் பொியசாமி மலர் தூவி மரியாதை செய்தாா். பின்னர் அங்கு குடியிருந்த தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்டோருக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்டசெயலாளர்கள் ரவிந்திரன், குமார், முனியசாமி, மாமன்ற உறுப்பினர்கள் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், தனலட்சுமி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் மரிய அந்தோணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா் மற்றும் ஜேஸ்பா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.