விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்குகள் ஜமாபந்தி முகாம் இன்று தொடங்கியது.
இதில் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்ட கோவில்பட்டி ஆர்.டி.ஓ.,ஜேன் கிறிஸ்டிபாய் பங்கேற்று, புதூா் குறுவட்டத்திற்கு உள்பட்ட முத்துசாமிபுரம், கவுண்டன்பட்டி, மெட்டில்பட்டி, சிவலாா்பட்டி, வன்னிப்பட்டி, செங்கோட்டை, பட்டிதேவன்பட்டி, குமாரசித்தன்பட்டி, மணியகாரன்பட்டி சென்னம்பட்டி, வௌவால்தொத்தி உள்ளிட்ட கிராம வருவாய் கணக்குகளை தணிக்கை செய்தாா்.

மேலும் சம்பந்தப்பட்ட கிராமங்களிலிருந்து ஆன்லைன் மூலம் பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றுதல் சம்பந்தமாக 40,மனுக்களும், உள்பிரிவு மாறுதல் சம்பந்தமாக 13,மனுக்களும், இலவச வீட்டு மனை பட்டா உத்தரவு சம்பந்தமாக 17, மனுக்களும், பல்வகை மற்றும் பிற துறை சம்பந்தமாக 2, மனுக்களும்,முதியோா் உதவித்தொகை கேட்டு வரப்பெற்ற 3, என 75 வரபெற்ற மனுவை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் முடிவில், உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் வழங்கப்பட்ட ஐந்து மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

நாளை (ஜூன்.12) நடைபெறவுள்ள ஜமாபந்தி முகாமில் , சங்கரலிங்கபுரம், நாகலாபுரம், நடுக்காட்டூா், புதூா், குளக்கட்டாகுறிச்சி, லட்சுமிபுரம், காடல்குடி, மல்லீஸ்வரபுரம், குமாரசக்கன்னபுரம், சுப்பையாபுரம், சுந்தரபச்சையாபுரம், என்.ஜெகவீரபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இணையதளம் மூலம் மனுக்களை வழங்கலாம் என தாசில்தார் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
