December 1, 2025
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு தினசாி குப்பைகளை சேகாிக்க 100க்கும் மேற்பட்ட பெண் தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றன. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மூலம் வழங்கப்பட்டு சுகாதாரமான தூய்மையான ஊராட்சியாக இருப்பதற்கு தவையான வாகனங்களும் இயக்கப்படுகிறது.

அதில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் ஆரோக்கியமான வாழ்்க்கையை தொடர்வதற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, உத்தரவின்படி சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்செல்வன், ஆலோசனை படி 3 மாதத்திற்கு ஓரு முறை ஆரம்ப சுகாதார நிலைய மூலம் நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.

மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார ஆய்வாளா் வில்சன், முன்னிலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர்கள் தூய்மை காவலர்களுக்கு ரத்த பாிசோதனை கண்பாிசோதனை, உயா்ரத்த அளவு, பாிசோதனைகளை மேற்கொண்டு குறைபாடுகள் மற்றும் ஆரோக்கியத்திற்குாிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஆரம்ப சுகாதார ஆய்வாளர் மேக்லின்கிளாஸ்டா, ெதாற்றுநோய் பிாிவு செவிலியர் ஜெனிஷா, மக்களை தேடி மருத்துவம் பெண் சுகாதார தன்னார்வலர்கள் பிரதீப்குமார், ஆசிக்அரபி, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கிளைச்செயலாளர் மாியதாஸ்சுபாஷ், மற்றும் கௌதம், தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி தொிவித்தார்.