மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் – முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
கடந்த 12.12.2024 அன்று பெய்த பெரு மழையினால் கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் பெரும் சேதமடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்தினை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினர்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வடமலாபுரம் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

