தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன் 3ம் தேதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. ஏனென்றால்
சாலை அமைப்பது உள்ளிட்ட மற்றும் அதை சார்ந்த வசதிகளை செய்யும் வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டது.இதனால் சில நாட்களாக சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் வந்து சென்றது.
இதனை அடுத்து இந்த இரண்டு சுங்க சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து அடுத்த இரு தினங்களிலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, NHAI தரப்பில், ஆன்லைனில் ஆஜரான ஒன்றிய அரசின் வழக்கறிஞர் வாதமே செய்யாத நிலையில், இடைக்காலத்தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் வில்சன், இதே டோல்களுக்கு இதற்கு முன்பும் நீதிமன்றங்கள் தடைவிதித்ததைக் குறிப்பிட்டு, தொடர்ந்து சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை எனச் சொன்னார்.
அதனை தொடர்ந்து நீதிபதிகள் தடை விதிக்கிறோம் என்று சொன்ன நிலையில், தூத்துக்குடியில் நடப்பது, “பகல் நேரத்தில் நடக்கும் வழிப்பறிக் கொள்ளை” எனக் குறிப்பிட்டார். அதன்பிறகு நீதிபதிகள், பாலகிருஷ்ணன் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யச் சொல்லி, இந்த வழக்கை ஒத்திவைத்ததுடன், உடனடியாக உயர்நீமன்ற உத்தரவிற்கும் தடை விதித்தனர்.

