December 1, 2025
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

பசுவந்தனை கிராமத்தில் அதிமுக சார்பில் கோடை கால நீர்-மோர் பந்தல் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசுவந்தனையில் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக., சார்பில் கோடைகால நீர்-மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி காமாட்சி ஏற்பாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்., கயத்தார் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் குறுக்கு சாலை ஐயப்பன், பசுவந்தனை கிளைக் கழக செயலாளர் சுப்பையா, புலவர் முருகன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி அவைத்தலைவர் தென்கரை மகாராஜா, கோவிந்தம்பட்டி கிளை செயலாளர்  வீரக்குமார், உட்பட பலர் கலந்துகொண்டனர்.