December 1, 2025
#செய்தி

பசுமை மாநகரை உருவாக்க உதவும் அனைவருக்கும், சுதந்திர தின விழாவில் நன்றி தெரிவித்த மேயர் ஜெகன்

தூத்துக்குடியில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமை வகித்தார். துணை ஆணையர் சரவணக்குமாா் வரவேற்புரையாற்றினார்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பேசுகையில்;

பசுமையான மாநகரை உருவாக்க உதவும் வியாபாரிகள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நகரில் அமைக்கப்பட்டுள்ள எண்டு டூ எண்டு சாலைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அனைத்து தரப்பினரும் பாராட்டி உள்ளனர். தற்போது 964 சாலை பணிகள், 2887 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டும் மேலும் கூடுதலாக 1500 லைட்டுகள் அமைக்கப்பட உள்ளது. மற்றும் செயற்கை புல் தரையுடன் கூடிய சிறிய விளையாட்டு மைதானங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே கூடுதலாக அனைத்து மண்டலங்களிலும் சிறிய மைதானங்கள் அமைக்கப்படும். கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பெருமழை வெள்ளத்தின் போது மாநகரில் மழைநீர் தேங்கிய இடங்கள் எல்லாம் கண்டறியப்பட்டு ஆய்வு செய்து தற்போது அந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இனி மழை காலங்களில் மாநகரப் பகுதியில் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கி உள்ளோம். நடப்போம் நலம்பேறுவோம் ஹெல்த் வாக் திட்ட கடற்கரை சாலை மேம்படுத்தவும், டைடல் பார்க் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை பசுமை சாலையாக மேம்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கேரி பைகளை உபயோகிப்பதை முற்றிலும் தவிர்த்து, நமது சந்ததிக்கு பசுமை மாநகராட்சியை உருவாக்க நீங்களும் உதவ வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பசுமை மாநகரை உருவாக்கும் வகையில் மரம் நடுதல் செய்தவர்கள், மாநகர வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்புடன் உதவியவர்கள் என மொத்தம் 65 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் கேடயம் வழங்கி கௌரவித்தார்.

விழாவில் துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணை பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையர்கள் பாலமுருகன், கல்யாணசுந்தரம், வெங்கட்ராமன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறிளா்கள் காந்திமதி, முனீர் அகமது, சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, ராஜசேகர். ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், இளநிலை பொறியாளா்கள் செல்வம், பாண்டி, அமல்ராஜ், லெனின், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், ரெங்கசாமி, ராமகிருஷ்ணன், சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார், பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், அதிஷ்டமணி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ரிக்டா, ராமுத்தம்மாள், ஜான், காந்திமணி, மந்திரமூர்த்தி, பாப்பாத்தி, சுயம்பு, பட்சிராஜ், சந்திரபோஸ், விஜயலட்சுமி, கந்தசாமி, ரெக்ஸின், மும்தாஜ், சுப்புலட்சுமி, உள்பட முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கோட்டு ராஜா, ரவீந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனா். செயற்பொறியாளர் தமிழ்செல்வன் நன்றியுரையாற்றினாா். முன்னதாக பணியாளர்கள் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப்பட்டது.