December 1, 2025
#ஊராட்சி

நீண்ட போராட்டதிற்கு பின் குளத்தூர் மேட்டு பனையூர் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்

தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பனையூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபான்டி தலைமையில் நடைபெற்ற சீரான மின்சாரம் இந்த பகுதிகளுக்கு வேன்டும் என்ற கோரிக்கையை ஏற்று மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தினார்கள். அதில் மின்சார வாரிய அதிகாரிகள் நேரடியாக ஊர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் விரைவில் சீரான மின்சார வசதி வழங்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தரப்படும் என உத்திரவாதம் எழுத்து பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவரிடம்  மின்சார வாரிய அதிகாரி வழங்கினார்.அதன் எதிரொலியாக 20-06-2024 அன்று புதிய டிரான்ஸ்பார்மர்

மின்சார வாரிய அதிகாரிகள்  மற்றும் ஊழியர்கள் உதவியுடன் அமைத்து கொடுத்தனர் .இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபான்டி  மேட்டு பனையூர் கிராம மக்கள்  சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டார்