December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி 6, 7வது வார்டு பகுதியில் மேயர் ஜெகன் ெபாியசாமி ஆய்வு!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று மேயர் ஜெகன் பெரியசாமியிடம் போல்பேட்டை அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்

தூத்துக்குடி மாநகராட்சி 6வது மற்றும் 7வது வார்டுக்குட்பட்ட லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, அய்யர்விளை, ஸ்ெடம்ப் பார்க் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வடிகால் மற்றும் சாலை பணிகளை பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

உடன் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, மாநகர சுற்றுசூழல் அணி தலைவர் வினோத்குமார், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் உடனிருந்தனர்.