சித்திரை மாத சிறப்புகள்
சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும் பங்குனியை ‘கடை மாதம்’ என்றும் சொல்வது வழக்கம். பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.
சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது. சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது,சித்திரை திருவிழா என்றாலே மதுரை மீனாட்சி அம்மன் திருவிழாதான். இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம், கள்ளழகர் எதிர்சேவை, வைகையாற்றில் இறங்கும் நிகழ்வும், தசாவதாரம் போன்ற விழாக்கள் நடைெபறுவது வழக்கம்.
சித்திரை மாதத்தில் வரக்கூடிய “சித்ரா பெளர்ணமி” மிகவும் சிறப்பு வாய்ந்தது
தமிழ்ப் புத்தாண்டு மலரும் புண்ணிய தினமாகும்!! தேவர்களின் உலகிற்கும், இப்பூவுலக மக்களுக்கும், பாலமாக அமைந்திருப்பது, சூரியனே ஆகும். மறைந்த நமது முன்னோர்களான பித்ருக்களுக்கு, அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் மற்றும் பல புனித தினங்களில் நாம் செய்யும் தர்ப்பணம், பித்ருப் பூஜைகள், பிண்ட தானம் ஆகியவற்றைத் தவறாது நம் முன்னோர்களிடம் சேர்ப்பிக்கும் தெய்வீக சக்தி வாய்ந்த சூரியன், மேஷ ராசியில் அதிக பலத்தையும். துலாம் ராசியில் வீரியக் குறைவையும் ( நீச்சம்) பெறுகிறார்.ஜோதிடக் கலையில், ஓர் விசேஷ, தனிச் சிறப்பு பெற்ற கணித முறை ஒன்று உள்ளது. அதற்கு, “சூரிய சித்தாந்தம்” என்று பெயர் .
நமது சூரிய மண்டலத்தில் திகழும் 8 கிரகங்களும், சூரியனிடமிருந்தே தங்களது சக்தியைப் பெறுவதாக, அதர்வண வேதம் கூறுகிறது.
நமது ஆரோக்கியத்திற்கும், சூரியனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நமது சரீரத்தில், இதயம், ரத்தம், நரம்புகள் ஆகியவற்றைப் பாதுகாப்பது சூரியனின் சக்திவாய்ந்த கிரணங்களே!!
மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஏற்படும் உடல் உபாதைகளை அவரவரது ஜனன கால ஜாதகத்திலிருந்து, துல்லியமாகக் கணித்து அறிந்து கொள்ள முடியும்! குறிப்பாக, சருமம், மற்றும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை மிகச் சரியாகக் கண்டுபிடிக்க ஜாதகத்தில் சூரியனின் நிலை மிகவும் உதவுகிறது. மேலும், சூரியனே ஆத்ம காரகன் ஆவார். ஜாதகத்தில், சூரியன் பலம் பெற்றிருப்பவர்கள், ஆத்ம பலத்தில் உயர்ந்து விளங்குவார்கள். அதற்கு மாறாக, சூரியன் பலம் குறைந்திருந்தால், அத்தகையவர்களுக்கு, மனோபலம் குறைந்து, சபலங்கள் அதிகமாக ஏற்படும் என “ஜோதிட அலங்காரம்” எனும் மிகப் பழைமையான கிரந்தம் அறுதியிட்டுக் கூறுகிறது.
சித்திரை மாதம் பிறக்கும்போதே, “சஷ்டி விரதம்” எனும் சக்திவாய்ந்த புண்ணிய தினமாக திகழ்கிறது. இன்று விரதமிருந்து, கந்தர் சஷ்டி கவசம் எனும் சக்திவாய்ந்த துதியினால், பார்வதி மைந்தனாகிய முருகப் பெருமானை பூஜிப்பது அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள அனைத்து பாவங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் அந்த விநாடியே நீங்கிவிடும்
சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், புது வருடத்தை வரவேற்பதைப் போல் வரவேற்கப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள். அனைவராலும் விரும்பப்படக் கூடிய நபர்களாக இருப்பார்கள்.
ஒரு காரியத்தை எடுத்தால் அதில் வெற்றி அடைய தன் முழு முயற்சிகளை ஈடுபடுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் பிரகாசிக்கக் கூடிய நபர்களாக இருப்பார்கள்.
போர் குணம் பொருந்திய செவ்வாய் அதிபதியாக கொண்ட மேஷ ராசியில் பிறப்பதால், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அறிவியல் துறை மற்றும் காவல் துறையில் அதிகம் இருப்பார்கள்
