December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

டாக்டர். எஸ். சிவ சைலம் போதை பழக்கம் ஒழிப்பு பற்றிய அறிவுரை.

சர்வதேச போதை பழக்கம் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத போதை மருந்து கடத்தல் தடுப்பு தினமான ஜீன் 26ம் தேதி 2024 அன்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கான சிறப்பு கூட்டம் மற்றும் பதாகையில் கையெழுத்திட்டு உறுதி மொழி மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. அதில் இந்திய மருத்துவ சங்கம், தூத்துக்குடி செயலாளராக இருக்கும் மருத்துவர் எஸ். சிவசைலம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு போதை பழக்கத்தால் உண்டாகும் மனம் மற்றும் உடல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் விதமாக பேசினார்.