தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் முத்தமிழறிஞர் கலைஞாின் நூற்றாண்டு விழாவை வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவியுடன் ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும். இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி வெற்றிக்கு பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டுதுைற அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆகியோருக்கு உங்கள் அனைவர் சார்பிலும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். திமுக ஆட்சியில் முதலமைச்சாின் முத்தான அனைத்து திட்டங்களும் மக்களை நல்லமுறையில் சென்றடைந்துள்ளன. அடுத்து நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தல் உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் கடந்த முறை நாம் முழுமையாக வெற்றி பெற்றதை போல் வரும் காலங்களிலும் வெற்றி பெற வேண்டும். மக்களோடு மக்களாக அனைவரும் பணியாற்றுங்கள் கட்சி வளர்ச்சி ஒன்றுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். புதிய வாக்களார்கள் சேர்ப்பின் மூலம் அதில் உள்ளவர்களை திமுகவில் இணைக்க வேண்டும். அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் 10 ஆண்டு ஒன்றிய பாஜக அரசு ஏழை எளிய மக்களுக்கு எந்த திட்டமும் நிறைவேற்றாமல் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போிடர் நிவாரண நிதி உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய நிதி உதவியும் வழங்காமல் இருப்பதோடு வேண்டும் என்றே திட்டமிட்டு வருமானவாித்துறை அமலாக்க துறைகளை ஏவி பொய் வழக்குகள் போட்டு எதிர்கட்சிகளை அழிக்க நினைப்பதை தான் செய்து வருகிறது. வேற்றுமையிலும் ஓற்றுமை எந்த கோட்பாடுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களிடையே மதத்தின் ஜாதியும் இனத்தின் பெயரால் குழப்பம்விளைவித்து வருகிறது. இதற்கு முடிவு கட்டவேண்டும் என்று இலக்கோடு நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி உருவாவதில் பெரும்பங்காற்றிய கழகத்தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அதே போல் தமிழ்நாடு புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தொகுதிகளை சுமூகமாக பிாித்துக்கொடுத்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு ஓற்றை இலக்கோடு தோ்தல் பிரச்சாரம் பயணம் மேற்கொண்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்டதிமுக சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தொிவித்து கொள்கிறோம் அதே போல் மாநில இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியை தொிவித்துக்கொள்வது. தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக துணைப்பொதுச்செயலாளா் கனிமொழியை அறிவித்து வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்திட வருகை தந்த தலைவருக்கு நன்றி. வேட்பாளா் கனிமொழி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் கிராமம் கிராமமாக வாக்கு சேகாித்தாா். அவரது வெற்றிக்கு உழைத்திட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகள் தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தொிவித்துக்கொள்வது, திமுகழகத்தை தோற்றுவித்த அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகஇயக்கத்தை கட்டிகாத்து 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர் கலைஞர். தன்னுடை கடைசி காலம் வரை தமிழ் தமிழர்நலன் சமத்துவம் சமூகநிதி, என்று பாடுபட்டவர் நம்மைவிட்டு சென்றாலும் அவரது கொள்கை மற்றும் கோட்பாடுகளை இன்றயை தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். கலைஞாின் நூற்றாண்டு பிறந்தநாள் வருகிற ஜீன் 3 அன்று வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகர ஓன்றிய பகுதி பேரூர் ஊராட்சி மற்றும் கிளைக்கழகங்கள் வார்டுகள் தோறும் அவரது திருவுரு படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கி கொள்கை விளக்க பாடல்களை ஓலிபரப்பி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. ஆண்டு முழுவதும் பொதுக்கூட்டங்கள் கவியரங்கங்கள் கருத்தரங்கள் விளையாட்டு போட்டிகள் பேச்சு கட்டுரை ேபாட்டி நடத்துவது சிறுவயது முதல் கழகத்திற்காக உழைத்து கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தூத்துக்குடி மாவட்டம் ஆரமப்பிக்கப்பட்ட நாள்முதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றியவரும் கலைஞரால் முரட்டுபக்தன் என்று பாராட்டு பெற்ற என்.பொியசாமி 7ம்ஆண்டு நினைவுநாள் வரும் 26ம் தேதியன்று காலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட வுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அவரது திருவுருவ படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, புதூர் வனிதா, மாவட்ட கவுன்சிலர்கள் ஐயாத்துரைபாண்டியன், தங்கமாாியம்மாள், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், ராமர், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலட்சுமி, ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், கருப்பசாமி, ராதாகிருஷ்ணன், சின்னமாாிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், வக்கீல் குேபர்இளம்பாிதி, வக்கீல் சீனிவாசன், கவிதாதேவி, அபிராமிநாதன், வக்கீல் அசோக், செளந்தர்ராஜன், துணை அமைப்பாளார்கள் பிரபு, ராபின், மகேந்திரன், பாரதி, நாகராஜன், சின்னத்துரை, அருணாதேவி, ரமேஷ், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிாியன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபாியேல்ராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ெஜயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், ரூபன், அருண்சுந்தர், முருகஇசக்கி, ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், மாாிச்சாமி, செல்வக்குமார், கவுன்சிலர்கள் ஜான்சிராணி, விஜயகுமார், கந்தசாமி, ராஜதுரை, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கடம்பூர் நாகராஜா, வக்கீல் முனீஸ்வாி, சீதாராமன், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
படம்: தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசினார். அருகில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, உள்பட பலர் உள்ளனர்.

