தூத்துக்குடி தமிழ்நாடு மின்கழக தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 99ம் ஆண்டு பணி நிரந்தரம் பெற்ற பணியாளர்கள் வௌ்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார்.
அனல் மின்நிலைய தொழிற்சங்க திட்ட தலைவர் ஆரோக்கிய சாமி, திட்ட துணைச்செயலாளர் சக்திவேல், என்டிபிஎல் தொழிற்சங்க ஓருங்கிணைப்பாளரும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளருமான அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க திட்ட துணைத்தலைவர் பெத்துராஜ் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மறைந்த எனது தந்தை எடுத்த கடும் முயற்சியினால் அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி பங்களிப்போடு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்து கலைஞர் ஓப்பந்த தொழிலாளர்களை எல்லாம் நிரந்தர அரசு ஊழியராக நியமித்த காலம் பொற்காலம், தற்போது கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அதே போல் எனது தந்தை உங்களின் வழிகாட்டி 7ம்ஆண்டு நினைவு நாள் தமிழக முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் ஆட்சியில் தொழிலாளா்களின் வௌ்ளி விழா காலச்சிறந்த பொருத்தம் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் திமுகவை விமர்சனம் செய்வதும் வன்மத்தோடு பேசுவதும் அவரது வாடிக்கையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு வரும்போது கடும் சொற்களால் நம்மை குறை கூறி தமிழர்களை உயர்த்தி பேசிவிட்டு வடமாநிலங்களுக்கு சென்று தமிழர்களை குறை சொல்லி பேசுவது தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடைபெற்றுள்ள தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் மோடிக்கு பாடம் புகட்டும். தளபதியார் ஆட்சியில் சமூகநிதி சமத்துவம் சிறுபான்மையினர் நலன் இட ஓதுக்கீடு வேலைவாய்ப்பு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. கலைஞர் ஆட்சியில் எப்படி எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்ததோ அதே வழியில் இப்போதும் திமுக ஆட்சி நடைபெறுகிறது. ஜாதி மதம் மொழி இவற்றை யெல்லாம் சொல்லி பிாிவினையை ஏற்படுத்த நினைக்கிறார் மோடி நாம் அனைவரும் ஓற்றுமையாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அதன் மூலம் வேலைவாய்ப்புகளை நாமே உருவாக்கி கொடுக்கிறோம். அதன் மூலம் சிலர் 4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் சமூதாயம் வளரவேண்டும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்ற பழ மொழிக்கேற்ப அனைவரும் ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும். திமுக வால் நாம் ஓன்றுபட்டு இருக்கிறோம். நமக்கான பணியை நாம் முறையாக செய்து மேலும் கூடுதலான உறுப்பினர்களை தொழிற்சங்கத்தில் சோ்க்க வேண்டும். இந்தியாவில் 3வது பொிய கட்சியாக திமுக தான் இருக்கிறது. பொியார் அண்ணா கலைஞர் வழியில் முதலமைச்சர் நாட்டு நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வரும் தளபதியாருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசி 150 தொழிலாளா்களுக்கு நினைவு பாிசுகள் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா்கள் பிரபு, நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராபின், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் ராமசந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பகுதிபொருளார்உலகநாதன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தெர்மல்துரை, பெருமாள் கோவில் அறங்காவலர் குழுதலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் அனல்சக்திவேல், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனல்மின்நிலைய ெதாழிற்சங்க திட்ட பொருளாளர் ஸ்டாலின் நன்றியுரையாற்றினார்முக ஆட்சியில் இட ஓதுக்கீட்டின் மூலம் தான் நான் 96ம் ஆண்டு அரசியலுக்கு வந்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றினேன். 28 ஆண்டுகாலம் பொதுவாழ்வில் இருக்கும் நான் எனது தந்தை மறைவிற்கு பின் 7 ஆண்டுகாலம் மாவட்ட செயலாளராக பணியாற்றுகிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஓரு முறை கலைஞர் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளேன். இதுபோன்ற நிகழ்வு எல்லாம் இந்த நாளில் நினைவு கூர்ந்து உங்களோடு பகிா்ந்து கொண்டு மகிழ்ச்சியடைகிறேன். என்று அமைச்சர் தொிவித்தார்.

