December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

உறுதியான கொள்கை இருந்தால் பெண்களும் வாழ்க்கையில் சாதிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் .

தூத்துக்குடி விவாதிக்கலாம் பெண்கள் அமைப்பின் 3ம் ஆண்டு விழா கைலாஷ் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் உமாகாசிதங்கம் தலைமை வகித்தார். இயக்குநா் லயன்சிராஜன் வரவேற்புரையாற்றினார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற 35 பெண்களுக்கு சிங்கப்பெண் என்ற விருதினை வழங்கி பேசுகையில் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை உண்டு என்ற சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தாா் அதன்மூலம் இன்று நமக்கு பங்கு கிைடக்கிறது. நாம் அதை பெற்று அனுபவித்து வருகிறோம். அதே போல் பெண்களுக்கு 33சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் 96ம் ஆண்டு நான் அரசியல் என்ற பொதுவாழ்க்கைக்கு வந்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி பின்னர் சட்டமன்ற தோ்தலில் வெற்றி பெற்று முதல்முறை கலைஞர் ஆட்சியிலும், இரண்டாவது முறை வெற்றிபெற்று தளபதியார் ஆட்சியிலும் அமைச்சராக பணியாற்றி வரும் நிலையில் 8 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றி 28 ஆண்டுகாலம் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளேன். ஆண்களுக்கு நிகரான எல்லா பணிகளையும் இப்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்களும் செய்கிறாா்கள். நம்முடைய மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் கவுன்சிலர்கள் 32பேர் உள்ளனா். இது 50 சதவீத இடஓதுக்கீட்டையும் கடந்து விட்டது. ஆகையால் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொண்டு கொள்கை முடிவோடு முழுமையான ஈடுபாடுகளுடன் பணியாற்றுங்கள் எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் பெண்கள் சாதிக்கலாம் இதற்கு அனைவரும் ஒரு உறுதிமொழியாக எடுத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
விழாவில் சட்ட ஆலோசகர் வக்கீல் ஜெயினி பிரான்சினா, ஆடிட்டர் ரோகினி லெட்சுமணன், அாிமா மாவட்டத்தின் முதல் பெண்மணி பிரமிளா பிரான்சிஸ்ரவி, உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.