தூத்துக்குடிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு மொழி பேசும் மக்கள் வருகின்றனர்,அவர்கள் பெரும்பாலும் பயணிப்பது இரயிலில் தான்.
ஆனால் தூத்துக்குடிமாநகராட்சி பகுதியில், காசுக்கடை பஜார் சாலையில் இருந்து. இரயில் நிலையம் செல்லும் சாலையில்,
இரயில் நிலையம் செல்வதற்கு வசதியாக ஒரு வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டி பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் TUTTICORIN என ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்ட காரணத்தினால்
அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு குழப்பம் அடைகிறார்கள் எனவே குழப்பம் இல்லாமல் சரியாக எழுதப்பட்ட வழிகாட்டி பலகையை அந்த இடத்தில் மாற்றி வைக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

