December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்நிலையம், நூலகம் அமையவுள்ள இடத்தினை மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகரத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியரின் நூலக பயன்பாட்டினை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பொியசாமி எடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக

புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் நூலகத்திற்கு என்று பிரத்தியேக இடம் ஒன்றிணை அமைப்பதற்காகவும் பொது மக்களின் கோர்க்கையினையடுத்து பணிகள் நிறைவுபெற்ற புற காவல் நிலையத்தையும் மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில் மக்கள் நலன் தான் முக்கியம், என்ற அடிப்படையில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதியை ேசா்ந்த வியாபாாிகள் சங்கத்தினர் மற்றும் ஆட்டோ கார் ஓட்டுநர்கள் பொதுநல அமைப்பை சேர்ந்தவர்களும் விடுத்த கோாிக்கையையடுத்து புறக்காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் எழுத்தறிவு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்வித்துறையில் அதற்கான வளா்ச்சி பணிகளையும் கட்டமைப்பு பணிகளையும் உருவாக்கி வரும் நிலையில் மாநகர பகுதியில் பல்வேறு நூலகம் இருந்தாலும் உள்ளுர் மற்றும் வௌியூர் வந்து செல்லும் பயணிகளும் தனக்கு கிடைக்கும் நேரத்தில் இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொண்டு நல்ல கருத்துக்கள் மூலம் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது விரைவில் இரண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினாா்

உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, பகுதி சபா உறுப்பினர் ஆர்தர், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் உடனிருந்தனர்.