கோவில்பட்டி, ஜூலை 12: உலக காகித பை தினத்தையொட்டி, கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் காகித பயன்பாட்டைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்கத் தலைவர் திரு. சோ. சங்கரன் தலைமை ஏற்று மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு உரையாற்றினார்.
மாணவர்கள் தங்கள் கைவண்ணத்தால் பல்வேறு வகையான அழகிய காகித பைகளைக் கையால் தயாரித்து காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியினை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் மாணவர்களிடையே பசுமை விழிப்புணர்வை ஊட்டியது.

