தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் (Mangrove forests) பெரும்பாலும் அலையாத்தி காட்டுகள் எனப் போற்றப்படும். இவை கடல் ஓரத்திலுள்ள உப்புநீரால் பாசிக்கப்பெறும் நிலத்தில் காணப்படும்.
தூத்துக்குடி,சர்வதேச சதுப்பு நில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு (International Day for Conservation of Mangrove Ecosystem) தமிழ்நாடு பசுமை இயக்கம் (Green Tamilnadu Mission) நெய்தல் மீட்சி இயக்கம் (TN-Shore) மற்றும் காலநிலை மாற்ற இயக்கம் (Climate Change Mission) திட்டத்தின் மூலம் தூத்துக்குடி வனக்கோட்டத்திற்குட்ட பழையகாயல் கிராமத்தில் கோடை இயற்கை முகாம் (Summer Nature Camp) தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதிரமன் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
இதில் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் இருந்து 120 மாணவர்கள் பங்கேற்று இயற்கையாக வளர்ந்த மாங்குரோவ் பகுதிகளை பார்வையிட்டனர். மாங்குரோவ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரினங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் மீன் முள் வடிவத்தில் (Fish Bone) தற்போது மாங்குரோவ் காடுகளை நடவுப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி வனவியல் விரிவாக்க அலுவலர் பெ.முனியப்பன், திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம், தூத்துக்குடி வனச்சரக அலுவலர் சீ.பாபு மற்றும் களப்பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளூர் கிராம மக்கள் மற்றும் வனத்துறைப் பணியாளர்கள் இணைந்து மாங்குரோவ் காடுகள் நடவுப்பணிகள் மேற்கொண்டனர்.
இந்திய வன நிலை அறிக்கை (IFSR) 2023 ஏற்படுத்திய வனக்கண்காணிப்பு மையத்தின் (Forest Survey of India) அறிக்கையின் படி தூத்துக்குடி வனக்கோட்டத்தில்
321 ஹெக்டேர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பல்லுயிர்ப்பரவல் மற்றும் பசுமையாக்குதல் திட்டம் (TBGPCCR) திட்டத்தின் கீழ் 200 ஹெக்டேர் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் நடவுப்பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டில் (2025-26) TBGPCCR திட்டத்தின் கீழ் மேலும் 200 ஹெக்டேர் பரப்பளவில் மாங்குரோவ் நிலப்பரப்புகளை மீளமைக்கும் பணியானது தூத்துக்குடி வனக்கோட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

