December 1, 2025
#திருநெல்வேலி மாவட்டம்

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவுக்கு வரவேற்பு

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேருவிற்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தலைமை கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரான கே.என்.நேருவுக்கு நெல்லையில் கேடிசி நகர் சீனிவாச நகர் பாலம் அருகில் நெல்லை கிழக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டம் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் பார்வையாளர் வசந்தம் ஏ.சி. ஜெயக்குமார்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன்,அப்துல்வகாப் எம்எல்ஏ,மேயர் ராமகிருஷ்ணன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.