December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

எப்போதுமே தூத்துக்குடி திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிருபிக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

தூத்துக்குடி மாநகர அண்ணாநகர் பகுதி 31வது வட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் அண்ணா நகர் 9வது தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்ட அவைத் தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பாலகுருசாமி, மாவட்ட தொமுச தலைவர் முருகன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணைச் செயலாளர் கனகராஜ் வரவேற்புரையாற்றினார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லா பகுதிகளிலும், பொதுக்கூட்டமும், வீடு வீடாக துண்டு பிரசுரமும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை நாம் எல்லா பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் அறிவுரையின்படி செயல்பட்டதால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம். தேர்தல் பயணத்தை சிறப்பாக செய்ய வேண்டும் மற்றவைகளை சிந்திக்க கூடாது. கூடுதல் கவனம் செலுத்தி மெத்தனபோக்கை கைவிட்டு நம்முடைய இலக்கை நோக்கி பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கலைஞரின் கொள்கைகளை தமிழக முதலமைச்சர் தளபதியார் கடைபிடித்து வருகிறார். 2026 தேர்தலில் 200 தொகுதியை இலக்காக கொண்ட முதலமைச்சரின் உத்தரவை கடந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த வடக்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை 3 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும். கவனமாக ஓவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். 2026 தேர்தலின் போது நமக்கு எதிாியே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் எப்போதுமே தூத்துக்குடி திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிருபிக்க வேண்டும். தொண்டர்களின் எண்ணத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல தொழில்நிறுவனங்கள் வரவுள்ளன. சோலார் சூாிய ஓளி திட்டமும், நிறைவேற்றப்பட்டு தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆதிதிராவிட நலத்துறை மூலம் மானியத்துடன் கூடிய பல கடன்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல் பல துறைகளில் சலுகைகள் பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்புதல்வன் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூாியில் சேர்ந்தவுடன் விண்ணப்பித்தவர்களுக்கு 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மக்களோடு மக்களாக பழகி மக்கள் பணியை செய்யுங்கள் திமுக பொதுஉறுப்பினர் கூட்டம் என்பது வயது வித்தியாசமின்றி எல்ேலாரும் கலந்து கொள்ளும் கூட்டமாகும் அதில் ஏற்றத்தாழ்வு ஏதுவும் கிடையாது. 1949ல் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி பவளவிழா ஆண்டில் இருக்கிறது. இதனையொட்டி எல்லா பகுதிகளிலும் உள்ள ெகாடிகம்பத்தை புதுப்பித்து புதிய கொடியை பட்டொலி வீசி பறக்கவிட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட கழகம் சார்பில் செய்யப்படும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பலர் எம்.எல்.ஏ தேர்தலில் வாக்களித்தேன் எம்.பி தேர்தலில் வாக்கு இல்லை என்ற குளறுபடியும் உள்ளன. வௌியூர் மற்றும் பல்வேறு பணிகளை இந்த காலக்கட்டத்தில் நடைபெறுகின்ற வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு நீக்கங்களை கவனமாக கையாண்டு அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். அதே போல் தலைமை கழகம் உத்தரவிற்கிணங்க கட்சி அமைப்பு ாீதியாக வார்டு பகுதிகளில் பொறுப்பில் இருந்து அது காலியாகி இருந்தால் அது முறையாக நிரப்பப்படும் திமுக என்பது பொிய கட்சி அதன் வாக்குகள் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். பட்டி தொட்டி எங்கும் உதயசூாியன் உதிக்க வேண்டும். ஓவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம் ஓரு தொண்டருக்கு துயரம் என்றால் அந்த பகுதியில் உள்ள அனைவரும் அதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய ஆட்சிதான் இருக்கிறது. இந்த ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டும். முதலமைச்சர் கூறியது போல் 2026 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று முதலமைச்சாின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கென்று கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் 425 கோடி மதிப்பில் பல்ேவறு வளர்ச்சி பணிகள் மேற்காௌ்ளப்பட்டுள்ளன. அந்த பணிகளும் தொடரும் நாம் வெற்றி பெற முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட பிரதிநிதிகள் பொற்குணம், மாரிமுத்து, பெருமாள், சிக்கந்தர், வட்டத் துணைச் செயலாளர்கள் நலமுத்து, சுந்தரராஜ், வேல்தங்கம், பகுதி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், தொகுதி பிரதிநிதி கருப்பசாமி, மாநகர கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணா தேவி, மற்றும் மைக்கேல் ராஜ் சின்னத்துரை, சண்முகராஜ், மணி பால்ராஜ், இசக்கி, முருகன், ராதாகிருஷ்ணன், பெரியசாமி, சங்கர் முருகேசன், ராமர் முருகராஜ் மாயக்கண்ணன், சக்திவேல், பேச்சிமுத்து, மதன்சுரேஷ் அன்பரசன், ஜெகன், ஸ்ரீதர் மகளிர் அணி பொன்னரசி, கல்யாணி, அமராவதி, மகேஸ்வரி, மற்றும் கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.