December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் வருவாய்த்துறை சார்பில்-சங்கரலிங்கபுரத்தில் தொழிலாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கு

தூத்துக்குடி மாவட்டம் (213) விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள தனியாா் மில்லில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் தொழிலாளர்களிடம் தேர்தல் வாக்களிப்பதின் அவசியம் மற்றும் உரிமை ,நூறு சதவீதம் நிச்சயமாக வாக்களிப்போம் என்பது குறித்தும், வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்,முகவரி மாற்றம்,திருத்தம், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் போன்ற தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிவம் 6, 7, 8 ஆகியவை வழங்கப்பட்டது.கருத்தரங்கில் மில் மேலாளர் குருநாதன்,40 புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளலமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் இந்நிகழ்வில் புதூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.