தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 05.08.25 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குபெட்டகங்களை பொருத்தவரையில் இந்த நிதியாண்டு 03.08.2025 வரை 2,98,107 அலகு சரக்குபெட்டகங்களை கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான 2,71,620 அலகு சரக்குபெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு 9.75 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முக்கியமாக நிலக்கரி, சுண்ணாம்புக் கல், உப்பு, ராக் பாஸ்பேட், சமையல் எண்ணெய் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவை கையாளப்பட்டதன் மூலம் இச்சாதனை நிகழ்ந்துள்ளது.
| முக்கிய பங்களிப்பாக மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி |
முக்கியமாக திருப்பூர், கோயம்புத்தூர், மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்குபெட்டகங்கள் அதிகரிப்பால் சரக்கு பெட்டகங்களின் அளவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதே போன்று வ.உ. சிதம்பரனார் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கு முக்கிய பங்களிப்பாக மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி 26.07.2025 அன்று பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்குதளம் -3 செயல்பாட்டினை நாட்டுகாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதியானது தொழில் மயமயாக்குதலில் வேகமான வளர்ச்சியடைந்து வருகிறது. வரவிருக்கும் சிங்கப்புரைச் சேர்ந்த நிறுவனத்தின் செயற்கை நார் தொழிற்சாலை, கொரியா நிறுவனத்தின் காலணித் தொழிற்சாலை மற்றும் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிய முதலீடுகள் போன்றவை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளுவதற்கு நல்ல முன்னோட்டமாக இது அமையும்.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், இச்சிறப்புமிக்க சாதனையை புரிய அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டகங்க முனையங்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார் என துறைமுக ஆணையம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

