December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட விஸ்வகர்மா ஜெயந்தி விழா

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

விளாத்திகுளம் வட்ட விஸ்வகர்மா தர்ம பரிபாலன சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா 18.09.2026 அன்று நடந்தது. விஸ்வகர்மா கட்டிடக்கலை கடவுள் என்று அழைக்கப்படுகிறார். விஸ்வகர்ம ஜெயந்தியின் திருவிழா அவர் ஒரு தெய்வீக கட்டிடக் கலைஞராக இருப்பதால் அவரது நினைவாக கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில்., தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டார விஸ்வகர்மா தர்ம பரிபாலன சங்கம் சார்பில் விஸ்வகர்மா காயத்ரி ஜெயந்தி விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

ஜெயந்தி விழாவிற்கு., கௌரவத்தலைவர் அழகுபால் ஆச்சாரியார் தலைமை வகித்தார். விளாத்திகுளம் வட்டார தலைவர் முருகன், செயலாளர் முருகேசன், பொருளாளர் சரவணபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். தொழில் கடவுளான விஸ்வகர்மாவுக்கு யாகசாலை பூஜை, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தங்கள் தொழில் மேம்பட வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில்., ஆலோசகர்கள் முத்துச்சாமி, ஆறுமுகம், வேல்ராஜ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முனீஸ்வரி, வட்டார துணை தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் கோட்டை செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.