தூத்துக்குடி ;
வியாட்நாம் நாட்டைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான வின்பாஸ்ட்தூத்துக்குடியில் ₹4250 கோடியில் தொழிற்சாலை அமைத்துள்ளது இதன் முதற்கட்டமாக
உலகத் தரத்திலான மின்னணு கார் உற்பத்தியாளரான வின்பாஸ்ட் நிறுவனம் தனது பிரீமியம் மின்சார SUV வகையான VF 7 மற்றும் VF 6 கார்கள் இந்திய சந்தையில் (ஜூலை 15) அன்று ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது முன்பதிவு செய்ய: https://www.vinfastauto.com.
முன்பதிவு ரூபாய் 21000,
என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் இந்த வாகனங்கள், ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடியில் நிறுவப்படும் VinFast தொழிற்சாலையின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு விற்பனைக்கு வரவிருக்கின்றன. அதன்பின் வாகன விநியோகமும் தொடங்கப்படும்.
இந்திய வாடிக்கையாளர்கள், தங்களுக்குப் பிடித்த வின்பாஸ்ட் மின்சார SUV கார்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களிலும்,VinFastAuto.in இணையதளத்திலும் ₹21,000 மதிப்புள்ள முழுமையாகத் திருப்பித் தரக்கூடிய முன்பதிவு தொகையுடன் பதிவு செய்யலாம்.
இந்த கார்கள், இந்தியச் சாலைகளும், வாடிக்கையாளரின் வாழ்க்கைமுறையும் கருத்தில் கொண்டு, உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டு, ஒரே மின்னணுக் கட்டணத்தில் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய திறனுடன் வருகின்றன. VF 7 மற்றும் VF 6 மாடல்கள் தினசரி பயணம், சிட்டியில் பயணம், ஊருக்கு செல்லும் பயணம் மற்றும் வார இறுதி பயணங்கள் என அனைத்திற்கும் ஏற்றவையாக, சக்திவாய்ந்த செயல்திறன், நவீன தொழில்நுட்பம் மற்றும் பயண நிம்மதியை ஒருங்கிணைத்து வழங்குகின்றன என அவர்களது வலைதள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

