தூத்துக்குடி,தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய்’யின் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சார வீடியோ தூத்துக்குடியில் செய்தியாளர்கள் முன்னிலையில் 05.05.25 அன்று வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிகில், மாஸ்டர், அண்ணாத்த மற்றும் உறியடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வில்லன் நடிகர் சங்கர் தாஸ், நடிப்பில் உருவாகியுள்ள “சல்யூட் ஃபார் TVK ஃப்ளாக்” என்ற இந்த பிரச்சார வீடியோவை ஸ்டார் பாபு இயக்கியுள்ளார்.
சல்யூட் ஃபார் TVK ஃப்ளாக்” பிரச்சார வீடியோ
இந்த வீடியோவில் ஒரு தரப்பினர் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை தூக்கி எறிந்து பின்னர் கொடியை தீ வைக்க முற்படுகின்றனர். அப்போது உடனடியாக ஒருவர் வந்து அதனை தடுத்து நமக்காகத்தானே அவர் கட்சி ஆரம்பித்து உள்ளார்.. ஆகவே அவருடன் சேர்ந்து நாம் பயணிப்போம் எனவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அப்போது உடனடியாக நடிகர் விஜய் தூத்துக்குடி விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து நிதியுதவி வழங்கினார் என்றும் அந்த பிரச்சார வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் உறியடி சங்கர்தாஸ் மற்றும் ஸ்டார் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அரசியலில் பயணிக்க முடியாத ரசிகர்களால் இந்த பிரசார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு பல்வேறு தரப்பிலும் நெருக்கடிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே தவெக தலைவர் விஜய் கரங்களை வலுப்படுத்தும் வகையில் களத்தில் மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடிய காணொளியை வெளியிட்டுள்ளோம். தவெக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தான் இந்த வீடியோவை நாங்கள் தயாரித்துள்ளோம். முழுக்க, முழுக்க இந்த வீடியோவை ரசிகர்களாகிய நாங்கள் தயாரித்து உள்ளோம் என்றார். பிரச்சார வீடியோவில் நடித்த பாபு கணேசன், பாலா, சிவா, அழகர், தங்கராஜ், வசந்த் உள்ளிட்ட விஜய் ரசிகர்கள் உடனிருந்தனர்.

