December 1, 2025
#கோவில்பட்டி

வேதாத்திரி மகரிஷி 115-ஆவது ஜெயந்தி விழா கோவில்பட்டியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

வேதாத்திரி மகரிஷி (1911–2006) அவர்கள் ஆன்மீகத் தலைவர், தத்துவஞானி, யோகாசிரியர் மற்றும் உலக சமாதான செயற்பாட்டாளர் ஆவார். “வாழ்க்கை ஒரு கலை” என்ற தத்துவத்தைக் கொண்டு மனிதர்கள் மனநலனும், உடல் நலனும், சமூக ஒற்றுமையும் பெற்று வாழ வேண்டும் என்று போதித்தவர். ஸ்கைவ் யோகா (Simplified Kundalini Yoga) மற்றும் அகத்தாய்வு  முறைகளை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியவர். மனித குல நலனை நோக்கமாகக் கொண்ட அவர், அறிவியல், ஆன்மிகம், சமூகவியல் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்.

 

கோவில்பட்டி அருணாச்சலம் பேட்டைத் தெரு அறிவுத்திருக்கோவில் சார்பாக, கோவில்பட்டி மனவளக்கலை மன்றத்தில் வேதாத்திரி மகரிஷியின் 115-ஆவது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் பேராசிரியர் எம்.விஜி தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் சரமாரிராஜ் முன்னிலை வகித்து மகரிஷியின் திட்ட முறைகளை விளக்கினார். பேராசிரியர் கோமதி, மன்ற அன்பர்களான நாகஜோதி, மகேஸ்வரி ஆகியோர் ஜெயந்தி விழாவை பற்றி உரையாற்றினர்.

மேனாள் ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைத்தார். பேராசிரியர் சங்கரநாராயண மூர்த்தி மகரிஷியின் அகத்தாய்வு முறைகளை விளக்கி நன்றி தெரிவித்தார்.விழா நிறைவாக கலந்து கொண்ட அனைவரும் பிரம்மஞானப் பாடல் மற்றும் உலக நல வாழ்த்து பாடினர்.