December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் விசிக வட்ட செயலாளர்கள் தேர்வு, மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் நியமித்தார்

By,CN அண்ணாதுரை

தூத்துக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு வட்டச் செயலாளர்களை நியமிக்க விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, உத்தரவிட்டுள்ளதை அடுத்து வட்ட நிர்வாகிகளிடம் விருப்பமனு பெறப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விசிக தலைமையின் அனுமதியுடன் தூத்துக்குடி மத்திய மாவட்ட விசிக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன் நியமன கடிதங்களை வழங்கிவருகிறார். இதனையடுத்து தூத்துக்குடி போல்டன் புரம் 36 வது வார்டு வட்ட செயலாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்த தேவநேசம் என்பவருக்கு நியமன ஆணையை மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன் வழங்கினார்.

வட்ட செயலாளராக பொறுப்பேற்ற தேவநேசத்திற்கு விசிக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் திருமாஜி நகர் மாரிமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் ரா.செல்வக்குமார், மாவட்ட தொண்டரணி லெ. முருகன், மாவட்ட ஊடகம் மையம் முத்துக்குமார், 49 வது வார்டு பொறுப்பாளர் ஆறுமுகம் உட்பட விசிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

.