கோவில்பட்டி தி.மு.இராசேந்திரன்,
கூறிய தகவலில்,
வைகோ அவர்களும் மறுமலர்ச்சி திமுகவும் மக்களின் குரலை முதல் குரலாக எதிரொலிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த 24 .9 .23 அன்று முதல் சென்னை – நெல்லை வந்தே பாரத் இயக்கப்படும் என்றும் அந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் 2023 செப்டம்பர் 21 அன்று தெற்கு இரயில்வே அறிவித்தது.
வளர்ந்து வரும் வர்த்தக நகரம் கோவில்பட்டியில் இந்த ரயில் நிற்காது என்ற தகவல் டெல்லியில் இருந்த வைகோ அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.
மதிமுக தலைவர் வைகோ அவர்கள் அதே செப்டம்பர் 21 ஆம் தேதி கடிதத்தைத் பாராளுமன்ற வளாகத்தில் ரயில்வே அமைச்சரிடம் நேரில் விளக்கிக் கூறி ஒப்படைத்தார்கள்.
இத்தகவல் பலரது முகநூல் பக்கங்களிலும், ஊடகங்கள் செய்தி தாள்களிலும் அன்றும் மறுநாளும் வெளிவந்துள்ளது.
என்னதான் கடிதம் கொடுத்து விளக்கினாலும்,
மக்கள் இதை பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை ரயில்வே துறைக்கு உணர்த்த வேண்டும் என்று. முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் சென்னையில் இருந்தவாறே கோவில்பட்டியில் ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று அறிவித்தார்கள்.
அவ்வாறே துரை வைகோ தலைமையில்,
48 மணி நேர அவகாசத்தில் இரண்டாயிரம் பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு 25.09.2024 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து,
தென் தமிழக எம்பிக்களுக்கான மதுரை கோட்ட அளவிலான கூட்டத்தில் வைகோ எழுப்பிய கோரிக்கைகளில் கோவில்பட்டியில் வந்தே பாரத் நிற்க வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில்
நாகா்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ ரயில்
இம்மாதம் 11-ஆம்தேதி முதல் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூா் முதல் நாகா்கோவில் வரை ‘வந்தே பாரத்’ ரயில் வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாகா்கோவிலில் புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் நிறுத்தங்களில் நின்று, சென்னை எழும்பூா் செல்லும் வகையில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு கோவில்பட்டி நிறுத்தம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, சென்னை எழும்பூா்-நாகா்கோவில் (எண். 06067), மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் – சென்னை எழும்பூா் (06068) வரையிலான ‘வந்தே பாரத்’ ரயில்கள் ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
தற்போது இந்த ரயிலுக்கு விருதுநகா் நிறுத்தம் நீக்கப்பட்டு, கோவில்பட்டி நிறுத்தம் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கோவில்பட்டிக்கு காலை 11.35 மணிக்கு வந்தடைகிறது. நாகா்கோவிலுக்கு 1.50 மணிக்கு போய் சேருகிறது.
மறுமாா்க்கத்தில் பிற்பகல் 2.20 மணிக்கு நாகா்கோவிலில் புறப்பட்டு, கோவில்பட்டிக்கு 3.53 மணிக்கு வந்தடைகிறது. இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரை சேருகிறது.
கோவில்பட்டியில் வந்தேபாரத்
ரயில் நிறுத்தமும்
மறுமலர்ச்சி திமுகவின் பங்களிப்பும் முக்கியமானது என்று தகவலில் கூறியிருந்தார்.

