ஆர்வத்துடன் போட்டியிட்ட மாணவிகள்
வல்லநாடு, துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவியர் பேரவை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. மாணவிகள் ஆர்வத்தோடு வாக்கு பெட்டியில் வாக்கு செலுத்தினர்.
இந்த தேர்தல் கல்லூரியில் முதல் முறை மாணவத் தலைவி, உப தலைவி,செயலர்,நிதியாளர் பதவிகளுக்கான தேர்தலில் 11 மாணவிகள் போட்டியிட்டனர்.
கல்லூரி பேரவை தலைவியாக தனுஈஸ்வரி, உபதலைவியாக சித்தி ஹீமைரா,செயலாளராக ரினாஸ் மிதுலா,நிதியாளராக சுப லெட்சுமி ஆகியோா் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இந்த தேசத்தின் பலம் அதன் ஜனநாயகம்.ஜனநாயக கூறுகளை பொது நிறுவனங்கள் அனைத்திலும் பலப்படுத்த வேண்டும்,குறிப்பாக மாணவர்கள் இளம் தலைமுறையினர் அதன் வலுவை உணர்ந்தாக வேண்டும். உணரும்போது சமுதாய ஒழுக்கம் சீர்படும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை என்று கல்வி இயக்குனர் பேராசிரியர் இரா.சாந்தகுமாரி தெரிவித்தார். கல்லூரி தாளாளர் ஹுமாயுன் கபீர், செயலாளர் இஜாஸ் அகமது, நிர்வாக அதிகாரி அறிவழகன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தேர்தல் கமிட்டி உறுப்பினர்களாக கல்வி இயக்குனர் பேராசிரியர் சாந்தகுமாரி தலைமையில், பேராசிரியர்கள் இகோபிசெல்வன், நந்தனா நாலா, பரமேஸ்வரி,பவானி,ஆறுமுக வேல் ஆகியோர் சிறப்பாக தேர்தலை நடத்தினார்கள்.

