December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு யூனியன் சேர்மம் முனியசக்தி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு யூனியன் சேர்மம் முனியசக்தி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

விளாத்திகுளத்தில் இருந்து பெருநாழி செல்லும் சாலையில் வில்வமரத்துப்பட்டி கிராமம் உள்ளது.இங்கு பேருந்து நிறுத்தத்தின் அருகே புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு 15ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ 5 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் துணை யூனியன் சேர்மன் சுப்புலட்சுமி சக்தி, விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,
பஞ்சாயத்து தலைவர் சின்னப்பொண்ணு,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தங்கராஜ் உட்பட கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.