December 1, 2025
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணியில் சிறப்பு கிராம சபை கூட்டம் கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமாரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தில் பயன்பெற சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி அறிவித்திருந்தார்.
அதன் படி தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் போில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முத்துராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்ேவறு கருத்துக்களை தொிவித்து ஊராட்சி மன்ற தலைவருடன் கலந்துரையாடல் செய்தனர்.
குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக “கலைஞர் கனவு இல்லம்” எனும் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கு அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குடிசையில் வசிக்கும் மக்களுக்கு புதிதாக வீடு கட்டி தரும் பொருட்டு 2024-25-ம் நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் 2000-2001-ம் ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சீரமைக்க வேண்டியுள்ள வீடுகளை கொண்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டு பழுதின் அடிப்படையில் சீரமைத்து தரும் பொருட்டு ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டம் 2024-25-ம் ஆண்டிற்கு செயல்படுத்தப்படுகிறது.
எனவே, “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடுகட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் மற்றும் ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த வீடுகளைக் கொண்ட பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை ஒப்புதல் பெற நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம மக்கள் பெரும்பாலானோர் பங்கேற்று கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடுகட்ட அனுமதி கேட்டு பயனாளிகள் 110 பேர் மனு அளித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வாி, தங்கபாண்டி, திமுக ஓன்றிய துணைச்செயலாளர் கணேசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனா ராஜன், கிளைச்செயலாளர்கள் சந்திரசேகர், கருப்பசாமி, மகாராஜா, மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு தலைவர் பிரேமா, எஸ்ஐ சிவன், தனிப்பிாிவு ஏட்டு முருகேசன், இளைஞர் அணி கௌதம், உள்பட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.