December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி விசிக மத்திய மாவட்டம் சார்பில் ஆம்ஸ்ட்ராங் முதலாமாண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது

தூத்துக்குடி,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் ஜூலை 5 இன்று மாலை அனுசரிக்கப்பட்டது. 

இந் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி விசிக மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ மா.கணேசன் தலைமை தாங்கினார், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜே.சித்ரா, மாவட்ட செய்தி தொடர்பாளர் ரா. செல்வகுமார் முன்னிலை வகித்தனர். இதில் அலங்கரிக்கப்பட்ட பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருவுருவப் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம.கணேசன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வழக்கறிஞர் அணி அர்ஜுன் வீரவணக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் 36 வார்டு தேவநேசம், வட்ட பொறுப்பாளர்கள் 58 வார்டு மாடசாமி, 49 வார்டு ஆறுமுகம், 58 வார்டு வட்ட துணை செயலாளர் சந்தனகுமார், மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் தமிழ் குமணன், முருகன், ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கங்கள் எழுப்பி, அஞ்சலி செலுத்தினர்.