தூத்துக்குடி,தமிழக முதலமைச்சருக்கு பதில் சொல்லும் இடத்தில் நான் இருக்கிறேன், விருப்பு வெறுப்பை மறந்து அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலையில் 16.05.25 அன்று நடைபெற்றது.
திமுக துணை பொதுச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி பேசுகையில்
2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தல் நமக்கு முக்கியம் தமிழ்நாடு முதலமைச்சர் செய்த சாதனைகள் அனைவற்றையும் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஓவ்வொரு பகுதிகளிலும் திமுக ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்.
- ஓன்றிய அரசு தமிழகத்திற்கு செய்த துரோகத்தையும் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
- ஓன்றிய அரசு பொறுப்பேற்கும் போது கூறிய உறுதிமொழிகள் திட்டங்கள் எதையும் செய்யாமல் நம்மை ஏமாற்றியது. இதையும் தோ்தல் வியூகத்தில் பயன்படுத்த வேண்டும்.
- குறிப்பாக நாம் அனைவருக்கும் ஓற்றுமை முக்கியம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை யெல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க வெற்றி ஓன்றுதான் இலக்கு என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும்.
- 100 நாள் வேலை திட்டத்தில் தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. ஓன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. இது போன்ற ஒன்றிய அரசு எளிய மக்களுக்கு செய்யும் துரோகங்களை, நிதி பங்கீட்டில் ஒன்றிய அரசால் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
- திமுகவினர் களப்பணியில் உள்ள சுனக்கங்களை, நடைமுறை சிக்கல்களை ஒளிவு மறைவின்றி நேரடியாக எண்ணிடம் தொிவிக்க வேண்டும்.
முதலமைச்சருக்கு பதில்சொல்லும் இடத்தில் மண்டல பொறுப்பாளராகிய நான் இருக்கிறேன். ஆகையால் நமக்கு வெற்றி ஒன்றே முக்கியம் என்பதை உணர்ந்து எல்லோரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள் என்று கனிமொழி எம்பி பேசினாா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் – மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்
மண்டல பொறுப்பாளராக கனிமொழி எம்.பி,யை நியமணம் செய்த கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நன்றியை தொிவித்துக் கொள்வதோடு கனிமொழி எம்.பி,க்கும் மாவட்ட திமுக சாா்பில் வாழ்த்துகளை தொிவித்துக் கொள்கிறோம்.
தோ்தல் களப்பணிகளை நிர்வாகிகள் எல்லோரும் நல்லமுறையில் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என பேசினாா்.
கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் இன்பா ரகு, பெருமாள், கணேசன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சின்னப் பாண்டியன், மூம்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், ராமசுப்பு, காசிவிஸ்வநாதன், முருகேசன், சுப்பிரமணியன், கோவில்பட்டி நகா் மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜான் அலெக்ஸ்ஸாண்டா், ராதாகிருஷ்ணன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், அபிராமிநாதன், வக்கீல் பாலகுருசுவாமி, அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, சீனிவாசன், பொன்சீலன், குபோ் இளம்பாிதி, ராமலட்சுமி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், சுரேஷ்குமாா், நிர்மல்ராஜ், மேகநாதன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரை பாண்டியன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவா் செந்தில்குமாா் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

