தூத்துக்குடி: தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் போதைப்பொருள் இல்லாத ஒரு நாட்டை அடைவதில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) என்.சி.சி பிரிவு, அமலோற்பவ மாதா மது ஒளிபோற் சங்கம் இணைந்து நடத்திய
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர். மதன் IPS தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, காந்தி மக்கள் இயக்கத் தலைவர் ஜேசுதாசன், கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஜெசி மற்றும் தூய பனிமய மாதா கோயில் பேராலய அதிபர் அருட்தந்தை ஸ்டார்வின் துணை அருட்பெரும் தந்தை பிரவீன் முன்னிலையில் விதித்தனர்.
பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் பேரணி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் இருந்து பனிமய மாதா கோவில் வரை சென்றடைந்தது, அங்கே அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கண்டனர். உறுதி மொழியில், போதை பழக்கத்தை ஒழிப்பது, தமிழக அரசுக்கு ஆதரவு வழங்குவது மற்றும் தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கண்டனர்.
நிறைவாக ஆயர் ஸ்டீபன் சிறப்புரையாற்றினார்;
போதையால் இளைய சமுதாயம் மற்றும் நாட்டிற்கு ஏற்படும் தீங்குகளை சுருக்கமாக எடுத்துரைத்தார், மேலும் மாணவர்களும் பொதுமக்களும் ஆரோக்கியமும் நற்பண்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விழிப்புணர்வு பேரணியில் தூய மரியன்னை கல்லூரி என்சிசி, NCC LL, AICUF, NSS, YRC, RRC, Anti-Drug Forum போன்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அலோசியஸ் பெண்கள் மணி. நொடி பள்ளி, புனித சேவியர் பள்ளி என்சிசி பிரிவுகளும் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆயர் நன்றி கூறினார்.

