December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி மாணவ மாணவிகள் சாதனை

தூத்துக்குடி சிஐஎஸ்சிஇ பள்ளி மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் மதுரை பள்ளியில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி செயிண்ட் ஆன்ஸ் பள்ளியிலிருந்து 15 மாணவ மாணவிகளான கிராஸ்லின் செல்வி, கிராஸ்வின், வன்சிகா, கெசியா, கிறிஸ்பின், சாம்ராஜ், சாமுவேல் ராஜ், அதித்ரா, அபர்ணா, ஆகியோர் தங்கப்பதக்கங்களும் உதய நித்திஸ், நம்பிராஜ் ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வெற்றி பெற்று தமிழ் நாட்டிற்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். இப்போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், பயிற்சியாளர் ராமலிங்க பாரதி, உடற்கல்வி இயக்குனர் பிரசாந்த், உடற்கல்வி ஆசிரியர்கள் ஐயம்மாள், ஐஸ்வர்யா, ஆகியோரை பள்ளி தாளாளர் அருட் சகோதரி பிரமிளா பிரான்சிஸ், பள்ளி முதல்வர் அருள் சகோதரி விஜய் ஆன், பள்ளி துணை முதல்வர் அருட்சகோதரி ஷெர்லின் செபஸ்தியான் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்கள்.