December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

வீர தீரச் செயலுக்கான விருது பெற்ற தூத்துக்குடி வீரர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் , அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி வீர தீரச் செயலுக்கான ஒன்றிய அரசின் 2023ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதினைப் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரும், மரியமைக்கேல் இருவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர்களிடம் மென்மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்களை தெரிவித்தார்.