December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் ெபாியசாமி, கலெக்டர் லட்சமிபதி, எஸ்.பி பாலாஜி சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு

தூத்துக்குடி உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் திருவிழாவாக நடைபெறும். அதன்படி கடந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தங்கத்தேர் திருவிழா நடைபெற்றது.

இந்த ஆண்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. இதனை முன்னிட்டு நேற்று 25-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை 7.00 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் ஏற்றி வைத்தார். பின்னர் 9.30 மணிக்கு திருப்பலி நடைபெற்று பகல் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடத்திைன முன்னாள் பங்குதந்தை குமார்ராஜா அணிவித்தார்.

திருவிழா நாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு செபமாலை, 5.00 மணிக்கு முதல் திருப்பலி, 4.45 மணிக்கு இரண்டாம் திருப்பலி, நண்பகல் 12.00 மணிக்கு செபமாலை, மாலை 3.00 மணிக்கு செபமாலை, மறையுரை, இரவு 7.15 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

தினமும் இளையோர், முதியோர், ஆதரவற்றோர், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், கப்பல் மாலுமிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினருக்கான சிறப்பு திருப்பலி நடைபெறும். மேலும், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பல்வேறு பங்கு இறைமக்கள் திருயாத்திரையாக வந்து திருப்பலி நிறைவேற்றுவார்கள்.

வருகிற 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 3-ம் திருவிழா அன்று புதுநன்மை விழா மற்றும் நற்கருணை பவனி நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பள்ளிக் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்படும். மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறுகிறது
.
ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் திருவிழா அன்று மாலை 7:00 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 :00பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், இரவு 9:00மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருப் பணி நடைபெறுகிறது. 5ம் தேதி 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், 7.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும் 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும் காலை 10:00 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்கான சிறப்பு திருப்பலியும், பகல் 12:00 மணிக்கு சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5:00 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நகர வீதிகளின் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது. இரவு 10:00 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஓப்புக் கொடுத்தல் நற்கருகணை ஆசீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பனிமயமாதா ஆலயத்திருவிழா மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன், கோட்டாட்சியர் பிரபு, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீணவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின்.