December 1, 2025
#தூத்துக்குடி

சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்று தூத்துக்குடி எல்கேஜி மாணவி அன்விதா சாதனை

தூத்துக்குடி,இந்தோனேசியாவில் நடந்த சர்வதேச 500 மீட்டர் ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி எல்கேஜி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்தோனேசியாவில் மே 24ல் நடைபெற்ற சர்வதேச ஸ்பீடு ஸ்கேட்டிங் சேலஞ்ச் – 2025 போட்டியில், 6 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 500 மீட்டர் போட்டியில் தூத்துக்குடி ஐபிஎன் அகடமி சார்பாக கலந்து கொண்ட தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியின் எல்கேஜி மாணவி அன்விதா சிவக்குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி அன்விதா தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி

தங்கப் பதக்கம் வென்று சாதித்த மாணவி அன்விதாவுக்கும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் மாதார் மற்றும் ஜீவா ஆகியோரின் முயற்சிக்கும், மாணவியின் வெற்றிக்கு ஆதரவாக இருந்த ஹோலி கிராஸ் பள்ளிக்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துக்கள், பாராட்டுகள் குவிந்து வருகின்றது.