December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பாத்திமா நகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் திருவிழா சிறப்பாக தொடங்கியது.

விழாவில் மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்பணி பிராங்கிளின் கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். சட்ட ஆலோசகர் அருட்பணி பெஞ்சமின் டிசூசா முன்னிலை வகித்தார். பங்குத்தந்தை அருட்பணி யேசுதாசன் பெர்னான்டோ, உதவி பங்குத்தந்தை அருட்பணி வின்சென்ட், முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி பிச்சை ஆகியோர் தலைமை தாங்கினர்.

மேலும், அமலோற்ப மாதா போதை ஒழிப்பு சங்க செயலாளர் அருட்பணி ஜெயந்தன், செயின்ட் தாமஸ் ஆங்கிலப் பள்ளி முதல்வர் அருட்பணி ஜேசுராஜா, இளையோர் பயிலக இயக்குநர் அருட்பணி சுதர்சன், அருட்பணி விமல்ஜன், அருட்பணி சில்வர் ஸ்டார், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம், அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், ஊர்நலக் குழுவினர், பாத்திமாநகர் பங்கு இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு  “அன்னை மரியே வாழ்க” எனக் கோஷமிட்டு கொடியேற்றத்தில் பங்கேற்றனர்.இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வாக நற்கருணை பவனி அக்டோபர் 5 ஞாயிற்றுக்கிழமை, மாலை ஆராதனை அக்டோபர் 12 ஞாயிற்றுக்கிழமை, அன்னையின் பெருவிழா அக்டோபர் 13 திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.